பிறந்த குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டிய காஜல் அகர்வால் - குவியும் வாழ்த்து

Name Kajal-Agarwal Baby-is-Born
By Nandhini Apr 20, 2022 10:46 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் அறிமுகமானார்.

இதனையடுத்து பல முன்னணி நடிகருடன் நடித்ததால் அவர் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதனையடுத்து, கடந்த ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சில மாதங்கள் முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமாக இருப்பதுடன் வெளியானது.

அதன்பின் கடந்த சில வாரங்களாக கர்ப்பிணியான காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், விளம்பரங்கள்,வளைகாப்பு, நீச்சல் உடையிலிக்கும் புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நேற்று நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தையின் பெயரை அறிவித்திருக்கிறார்கள்.

அக்குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அவர்கள் சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளனர்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நீல் என்ற பெயர் குட்டியாக இருந்தாலும் கியூட்டாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீல் என்றால் சாம்பியன் என்று அர்த்தமாம். சமூகவலைத்தளத்தில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிந்து வருகிறது. 

பிறந்த குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டிய காஜல் அகர்வால் - குவியும் வாழ்த்து | Kajal Agarwal Baby Is Born

பிறந்த குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டிய காஜல் அகர்வால் - குவியும் வாழ்த்து | Kajal Agarwal Baby Is Born