பேருந்தில் அத்துமீறி நடந்த நபர்.. அடுத்த நொடி பெண் செய்த சம்பவம் - வைரல் வீடியோ!
பாலியல் தொல்லை கொடுத்த நபரை பெண் ஒருவர் தைரியமாக எதிர்த்த வீடியோ வைரலாகியுள்ளது.
நபர்..
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேருந்து பயணத்து கொண்டு இருந்தபோது, தனக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தன்னை தவறாக தொட முயன்றதாக பெண் ஒருவருக்கு தெரிந்தது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
மேலும் தனக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த நபரின் இரு கன்னத்திலும் பளார் பளாரென 26 முறை தொடர்ந்து அறைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவாகியது. மேலும் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது.
பெண்
அதிலும் அந்த பெண் அருகில் அமர்ந்திருந்தவர், தன்னை தவறாக தொட முயன்றதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நபர் மது போதையில் இருந்ததாக தெரியவந்தது.
மேலும் பெண் அறைந்த போது, போதை ஆசாமி மன்னிப்பு கேட்ட காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது பேருந்தில் இருந்தவர்கள் யாரும் அப்பெண்ணை தடுத்து நிறுத்தவில்லை. இதையடுத்து, நடத்துநர் இதில் குறுக்கிட்டு அப்பெண்ணை சமாதனம் செய்தார்.
அதன் பிறகு குடிபோதை அசாமியை பிடித்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். எனினும் இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் அந்த நபருக்கு உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
बसमध्ये मद्यपीकडून महिला प्रवाशाची छेड; रणरागिणीने दिला चांगलाच चोप#pune #pmpml #women #police pic.twitter.com/V1RtrExLxS
— Lokmat (@lokmat) December 19, 2024