படத்தில் காதலை பிரித்த வில்லன் நடிகர் - ஆத்திரத்தில் திரையரங்கில் வைத்து அறைந்த பெண்
படத்தில் காதலை பிரித்த ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பெண் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லவ் ரெட்டி
சமரன் ரெட்டி இயக்கத்தில் லவ் ரெட்டி(Love Reddy) என்ற தெலுங்கு படம் கடந்த அக்டோபர் 18 ஆ,ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் என்.டி.ராமசாமி(NT Ramasamy) நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை பார்க்க படக்குழு திரையரங்கிற்கு வந்துள்ளது.
அறைந்த பெண்
அப்போது படத்தில் காதல் ஜோடியை வில்லன் என்.டி.ராமசாமி பிரிப்பது போன்ற காட்சி வந்துள்ளது. உடனே அங்கிருந்த பெண் ஒருவர் வேகமாக ஓடி வந்து என்.டி.ராமசாமியை அறைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். அருகே இருந்தவர்கள் அந்தப் பெண்ணை அடிக்க விடாமல் தடுத்தனர்.
#LoveReddy చిత్ర నటుడిపై ప్రేక్షకురాలి దాడి..
— Ramesh Pammy (@rameshpammy) October 24, 2024
హైదరాబాద్ నిజాంపేట జీపీఆర్ మాల్ లో ఘటన
సినిమా క్లైమాక్స్ చూసి ఎమోషనల్ అయిన ఒక ప్రేక్షకురాలు థియేటర్స్ విజిట్ కు వెళ్లిన చిత్రబృందంలోని తండ్రి పాత్రను పోషించిన ఎన్ టీ రామస్వామి అనే నటుడు నిజంగానే ఆ ప్రేమజంటను విడిదీశాడని కోపంతో తిడుతూ… pic.twitter.com/FY9uuXTUlC
காதல் ஜோடியை பிரித்ததை ஏற்க முடியாமல் தாக்கியதாக அவர் தெரிவித்தார். இதன் பின் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan