ஜூஸ் பாட்டிலில் இருந்த படத்தால் ஆத்திரம் - நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்
மதமாற்ற குற்றச்சாட்டால் நடிகர் பெஞ்சமினுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெஞ்சமின்
நடிகர் பெஞ்சமின், வெற்றி கொடி கட்டு படம் மூலம் அறிமுகமாகி ஆட்டோ கிராப், பகவதி, திருப்பாச்சி உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது நண்பர்கள் இருவருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்துக்கு காரில் சென்றார்.
மதமாற்ற குற்றச்சாட்டு
அங்கிருந்த பொதுமக்களுக்கு ஜூஸ் பாட்டில்களை வழங்கியுள்ளார். அந்த பாட்டிலில் இயேசுவின் படமும், கிறிஸ்தவ வாசகங்களும் இடம்பெற்றிருந்தது. இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதில் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு, யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள், மதமாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திரைப்பட நடிகர் #பெஞ்சமின் தலைமையில் சட்டத்திற்கு புறம்பாக மதமாற்ற மோசடி பொதுமக்களின் தகவலின் பெயரில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் களத்தில்...
— Hindu Munnani (@hindumunnani_tn) October 20, 2024
ஈரோடு மேற்கு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தமிழ் திரைப்பட நடிகர் பெஞ்சமின் உடன் சுமார் நான்கு நபர்கள் pic.twitter.com/GxYJV344UP
அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால் பெஞ்சமின் உடன் வந்தவர்களுடன் சேர்ந்து காரில் ஏறி கிளம்பினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.