பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த வேண்டும் - தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

Sexual harassment India Supreme Court of India
By Swetha Aug 20, 2024 09:30 AM GMT
Report

பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பாலியல் இச்சை

கடந்த ஆண்டு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒரு வழக்கின் விசாரணையின்போது, மைனர் பெண்ணும் இளைஞனுக்கும் காதலித்ததாக தெரியவந்துள்ளது.

பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த வேண்டும் - தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Women Should Control Desire Court Judgement Cancel

இதனால் இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், 'தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை.

மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது கொடுமையானது...உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது கொடுமையானது...உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

உச்சநீதிமன்றம் 

சுய கண்ணியத்திற்கு ஊறு விளைவித்து வளர்ச்சியைத் தடுக்கும், பாலியல் இச்சைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். 2 நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வியடைந்தவர்களாகவே தெரிவார்கள்' என்று நீதிபதி அறிவுரை கூறியிருக்கிறார்.

பெண்கள் பாலியல் இச்சையை கட்டுப்படுத்த வேண்டும் - தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Women Should Control Desire Court Judgement Cancel

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓஹா,

உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞனைக் குற்றவாளி என்று அறிவித்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்கினார்.