மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது கொடுமையானது...உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

India Madhya Pradesh
By Swetha Jun 22, 2024 12:30 PM GMT
Report

கணவருடன் தாம்பத்தியத்துக்கு மனைவி மறுப்பது என்பது ஒரு வகையான கொடுமை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 பாலியல் உறவுக்கு மறுப்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் நடந்த 3ஆம் நாளே அந்த பெண் தேர்வு எழுத வேண்டும் என தனது தாயின் வீட்டுக்கு சென்றார்.அதன்பிறகு தேர்வுகள் முடிந்தும் இளம்பெண் மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது கொடுமையானது...உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Denial Of Wife Physical Relationship Can Be Cruel

இதையடுத்து, கணவரின் குடும்பத்தினர் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்தனர்.அப்போது அந்த இளம்பெண் கணவருடன் செல்ல மறுத்தார். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் சார்பில் கணவரின் குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டது. எனவே பெண்ணை விவாகரத்து செய்ய புதுமாப்பிள்ளை முடிவு செய்தார்.

வழக்கு தொடர்பாக அவர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு செய்தார். அப்போது, ‛‛திருமணமாகி 3 நாட்கள் மட்டுமே மனைவி எனது வீட்டில் இருந்தார். முதலிரவிலேயே என்னை பிடிக்கவில்லை. குடும்பத்தின் கட்டாயத்தால் தான் திருமணம் செய்ததாக கூறினார். இதனால் தாம்பத்திய உறவு எதுவும் வைத்து கொள்ளவில்லை'' என்று வாதிட்டார்.

ஆசை காட்டி பாலியல் உறவு..ஆண்கள் மீது தவறு சொல்ல முடியாது - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

ஆசை காட்டி பாலியல் உறவு..ஆண்கள் மீது தவறு சொல்ல முடியாது - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்

மனைவி தரப்பில், ‛‛தேர்வு இருந்ததால் தான் பிறந்த வீட்டுக்கு வந்தேன். ஆனால் அதனை சாதகமாக பயன்படுத்தி கணவரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டனர். இதனால் நான் எனது கணவரின் வீட்டில் வாழ விரும்பவில்லை. அவருடன் பிறந்த வீட்டில் வாழ விரும்புகிறேன்'' என்ற வாதம் வைக்கப்பட்டது.

மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுப்பது கொடுமையானது...உச்சநீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Denial Of Wife Physical Relationship Can Be Cruel

இதைக்கேட்ட நீதிமன்றம், கடந்த 2021ம் ஆண்டு புதுமண தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இளம்பெண் சார்பில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வேளையில் கணவர் தரப்பில், ‛‛திருமணம் முடிந்த 3 நாளில் இருவருக்கும் இடையே தாம்பத்தியம் எதுவும் நடக்கவில்லை. தேர்வு எழுதுவதாக பிறந்த வீட்டுக்கு சென்றவர் மீண்டும் சேர்ந்த வாழ மறுத்தார்'' என்று வாதிடப்பட்டது.

அதேபோல் இளம்பெண் சார்பிலும் தன்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, ‛‛கணவருடன் தாம்பத்தியத்துக்கு மறுப்பது என்பதும் ஒரு வகையான கொடுமை தான். இதனால் சாத்னா நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை மாற்றமின்றி உறுதி செய்கிறோம்'' எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது