ஆசை காட்டி பாலியல் உறவு..ஆண்கள் மீது தவறு சொல்ல முடியாது - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!
திருமண ஆசைக்காட்டி ஏமாற்றியதாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்குக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றம்
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர். ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு அந்த இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் இளைஞர் மீது பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். எனினும் அடுத்த ஆண்டே அவர் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து அந்த பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
விசாரணைக்கு வந்த இந்த வழக்குக்கு நீதிமன்றம், இளைஞரை விடுவித்தது சரி என்றும், ஆண்கள் பக்கமே எல்லா நேரமும் தவறு என்று சொல்ல முடியாது என்று தெரிவித்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, 2019ம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 5 ஆண்டுகள் இருவரும் காதலித்துள்ளனர்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தனர்.பின்னர், 2019ல் இளைஞர் இந்த உறவை முறித்திருக்கிறார். இதை தொடர்ந்து தான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது. அங்கு இளைஞர் தரப்பு பக்கம் உள்ள நியாயத்தை நீதிபதிகள் விசாரித்தனர்.
சர்ச்சை தீர்ப்பு
என்னவென்றால், காதலிப்பதற்கு முன்னர் இளம் பெண்ணின் சாதி குறித்து விசாரித்திருக்கிறார். இளம்பெண் தான் யாதவ் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராவார்.அதேபோல தனக்கு ஏற்கெனவே திருமணமாகி இருக்கிறது என்பதையும் அப்பெண் மறைத்திருக்கிறார்.
எனவே இளைஞர் இந்த உறவை துண்டித்திருக்கிறார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "யாரை யார் ஏமாற்றினார்கள் என்று தீர்ப்பளிப்பது கடினம். தன் திருமணத்தை மறைத்து, சாதியை மறைத்து 5 ஆண்டுகள் வரை ஒருவருடன் இளம் பெண் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.
இவர்கள் அலகாபாத் மற்றும் லக்னோவில் லாட்ஜ்களில் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். எனவே விசாரணை நீதிமன்றம் இளைஞரை விடுவித்திருக்கிறது. வழக்கில் இளம்பெண்ணை, இளைஞர் திருமண ஆசைக்காட்டி ஏமாற்றினார் என்றும் அவரை 5 ஆண்டுகள் அனுபவித்து வந்திருந்தார் என்பதும்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். திருமணத்திற்கு பின்னர் அதை மறைத்து மற்றவர்களுடன் இணைந்திருக்கும்போது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுவதை, திருமணத்திற்கு முந்தைய குற்றச்சாட்டுகளை போன்று அணுக முடியாது" என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.