அமேசான் பார்சல்.. உள்ளே குமட்டும் நாற்றம் - பெண்ணுக்கு வந்த அந்த பொருள் என்ன?
பெண் ஒருவருக்கு வந்த அமேசான் பார்சலில் வந்த பொருள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் பார்சல்..
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் எளிமையாக கிடைப்பதால் அதை ஆர்டர் செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், அமேசானில் இருந்து பெறப்படும் டெலிவரி பார்சலில் இருந்து பொருட்கள் மாறி இருப்பதையும்,
அதில் பல்லி போன்ற ஜந்துகள் இருப்பதையும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், ரேச்சல் மெக் ஆடம் என்ற பெண் ஒருவர் அமேசானில் சைக்கிள் ஹெல்மெட்டை ஆர்டர் செய்திருந்தார். அவர் ஹெல்மெட்டை ஆர்டர் செய்து பார்சளுக்காக ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால் பார்சலைத் திறந்தவுடன், உள்ளே இருந்த துர்நாற்றம் மற்றும் அழுகல் காரணமாக அந்தப் பெண்ணுக்கு குமட்டல் ஏற்பட்டது. பார்சல் வந்ததும், அந்த பெண் அதைத் திறந்தார். பின்னர் பார்சல் உள்ளே இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
என்ன நடந்தது?
ஏனெனில் அந்த பெட்டிக்குள் ஹெல்மெட் இல்லை பதிலாக ரொட்டித் துண்டுகளும், எலி எச்சங்களும் கிடந்துள்ளன. அந்த பெண் சற்று உற்றுப்பார்த்தப்போது பெட்டியின் உள்ளே ஒரு ஓட்டை இருப்பதைக் கண்டார். அதை திறந்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் எலி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த பென், பெட்டிக்குள் அழுகிய நிலையில் எலி இருந்ததை பார்த்து நம்பவே முடியவில்லை. அதை பார்த்ததும் மயங்கிவிடுவேனோ என்று நினைத்தேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு நான் எதையும் தொடவே இல்லை.
அப்படியே பின்வாங்கிவிட்டேன். இறந்த எலியையும், பார்சலின் சுகாதாரமற்ற நிலையையும் பார்த்து, அன்று இரவு உணவைக் கூட சாப்பிட முடியாமல் தவித்தேன் என்று கூறியுள்ளார்.
அவர் உடனடியாக அமேசானிடம் இதை பற்றி புகாரளித்துள்ளார். அமேசான் இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, டெலிவரியால் ஏற்பட்ட சிரமத்தை ஒப்புக்கொண்டு, முழுப் பணத்தையும் திருப்பித் தருவதாக அறிவித்தது