இனி சில்வர் பேப்பரில் உணவு பார்சல் செய்யக்கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை!
துரித உணவுகளை பார்சல் செய்ய ல்வர் கவர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
பார்சல்
தமிழகத்தில் ஒவ்வொரு உணவகங்களும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பாரசல் செய்யப்பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்த நிலையில், அவை இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
ஆனால் பெரும்பாலான நடுத்தர மற்றும் சாலையோர உணவகங்களில் பிரியாணி, சாப்பாடு, சாம்பார் உள்ளிட்ட உணவை பார்சால் செய்ய 'பிளாஸ்டிக் கவர்'கள் மற்றும் தரமற்ற, 'சில்வர் பேப்பர்' பயன்படுத்தப்படுகிறது.
இது போன்ற பார்சல் கவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், பிரியாணியை சில்வர் கவரில் பார்சல் செய்து அதன் கலர் உருகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
நடவடிக்கை
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, தரமற்ற சில்வர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் மற்றும் கடையில் வைத்து விற்பனை செய்தால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கூறியதாவது, ஹோட்டல்களில் உணவு பொருட்கள் பார்சல் செய்ய, 'பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்தினால் முதல் முறை, 2,000 ரூபாய்; இரண்டாம் முறை 5,000 ரூபாய்; மூன்றாம் முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும்' என்று தெரிவித்து உள்ளார்.