12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் - காப்பகத்தில் அதிர்ச்சி!
நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பெண் காப்பாளர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காப்பகம்
நாகை மாவட்டத்தில், ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் நடந்து வருகிறது. இதில் 93 குழந்தைகள் உள்ளனர், இங்கு 18 வயது வரை குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.
இங்கு பல குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் ஒரு குடில் அமைத்து ஒரு காப்பாளருக்கு 10 குழந்தைகள் என பிரித்து பராமரித்து வருகின்றனர்.
தொடர்ந்து, இங்கு 12 வயதான சிறுவன் ஒருவர் மதில் சுவர் மீது ஏறி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த காவலர்கள் அந்த சிறுவனை பிடித்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், அந்த சிறுவர் கூறிய தகவலால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அந்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த குடிலில் ஒரு 40 வயதான பெண் காப்பாளர் பராமரித்து வந்துள்ளார்.
அவர் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
மேலும், இதனை வெளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் காப்பாளரை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அங்கிருந்த குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.