தன் இதயத்தை தானே பார்வையிட்ட பெண், பின்னணி என்ன? - ஷாக் ஆன நெட்டிசன்கள்!

England
By Vinothini May 22, 2023 04:27 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் தனது இதயத்தை தானே பார்த்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அறுவை சிகிச்சை

இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர் சுட்டன்.

women-sees-her-own-heart-and-shares-pictures

இவருக்கு 22 வயதாகும்போது கார்டியோமயோபதி என்னும் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த கார்டியோபதி என்பது இதயத்திலிருந்து இரத்தம் உடலுக்கு பாய்வதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ‘ஜெனிஃபர் இதே இதயத்துடன் இருந்தால் அவர் இறந்துவிடுவார், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவை’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் இவர் தங்கியுள்ளார், ஏனெனில் இவரது தாய் இதுபோல ஒரு அறுவை சிகிச்சையில் தான் உயிரிழந்தார்.

மேலும், அவரை மருத்துவர்கள் சமாதானம் செய்து சிகிச்சை செய்தனர். அதனால் இவருக்கு 13 வருடங்களுக்கு முன்னர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அருங்காட்சியம்

இந்நிலையில், இவரது சிகிச்சைக்கு பின்னர் தனது இதயத்தின் மூலம் உறுப்பு தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை அருங்காட்சியகத்தில் வைக்க மருத்துவர்களிடம் ஜெனிஃபர் அனுமதி கோரினார்.

women-sees-her-own-heart-and-shares-pictures

பின்னர் அவர்கள் ஒப்புக்கொண்டதும், அவர் ஹோல்போர்னில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைத்தார்.

தற்பொழுது அவர் பல வருடங்கள் களித்து அவரது இதயத்தை பார்வையிட்டு அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், "இது நம்ப முடியாத உண்மை. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 16 வருடங்கள் அற்புதமாக கழிந்துள்ளன.

நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். முடிந்த அளவு எனது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன்.

உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வுக்கு நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.