போர் நடவடிக்கை எதிரொலி : புதினின் மெழுகு உருவச்சிலையை அகற்றிய பிரபல அருங்காட்சியம்

putinwaxstatueremoved grevinmuseumputin parisgrevinmuseum
By Swetha Subash Mar 03, 2022 03:30 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

கடந்த 24-ந் தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கி இன்று வரையும் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

போர் நடவடிக்கை எதிரொலி : புதினின் மெழுகு உருவச்சிலையை அகற்றிய பிரபல அருங்காட்சியம் | Grevin Museum In Paris Removes Putin Wax Statue

இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,

ரஷ்யாவும், உக்ரைனும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த போக்கிற்கு உலக நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யா உக்ரைன் நாடின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிருத்தவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

எதற்கும் ரஷ்யா செவி சாய்க்காததால் பல்வேறு விதமான தடைகளை உலக நாடுகள் விதித்து வருகிறது.

போர் நடவடிக்கை எதிரொலி : புதினின் மெழுகு உருவச்சிலையை அகற்றிய பிரபல அருங்காட்சியம் | Grevin Museum In Paris Removes Putin Wax Statue

இந்நிலையில், பாரிஸில் உள்ள புகழ்பெற்ற க்ரெவின் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினி மெழுகினால் செய்த உருவச்சிலை அகற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில் அதிபர் புதினின் சிலையை அகற்றியிருகிறார் அருங்காட்சியத்தின் இயக்குனர்.

“இதுவரை இந்த அருங்காட்சியத்தில் ஹிட்லர் போன்ற சர்வாதிகார்களை நாங்கள் காட்சிப்படுத்தியது இல்லை. எனவே புதினையும் நாங்கள் காட்சிபடுத்த விரும்பவில்லை” என இந்த நடவடிக்கை குறித்து கூறப்பட்டுள்ளது.