திடீரென வீட்டு வாசலில் குவிந்த நூற்றுக்கணக்கான பார்சல்கள் - திறந்து பார்த்து மிரண்டுபோன பெண்!

United States of America World
By Vinothini Aug 01, 2023 08:03 AM GMT
Report

பெண் ஒருவர் வீட்டிற்கு திடீரென நூற்றுக்கணக்கான பார்சல்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்சல்கள்

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்தவர் சிண்டி ஸ்மித். இவரது வீட்டு வாசலில் திடீரென பெட்டி பெட்டியாக கொரியர் பார்சல்கள் வந்து குவிய தொடங்கியுள்ளது. இதில் அமேசான் உள்ளிட்ட பல முன்னணி கொரியர் சேவை நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து பார்சல்கள் வந்த‌ கொண்டிருந்தது.

women-received-100-above-parcels

இதில் நூற்றுக்கணக்கான பார்சல்கள் இருந்துள்ளன, அனால் இவை எதுவும் இவர் ஆர்டர் செய்யவே இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதனை திறந்து பார்த்துள்ளார்.

ஷாக்கான பெண்

இந்நிலையில், அந்த பார்சலில் ஆயிரக்கணக்கான விளக்குகள், குளூ கன்கள் இருந்துள்ளன. மேலும், தொடர்ந்து பார்சல்கள் வந்துகொண்டே இருந்தது, டெலிவரி ட்ரைவர்களால் இவரது வீட்டு வாசலை நெருங்க கூட முடியாத அளவிற்கு வாசல் முழுவதும் பெட்டிகள் நிறைந்துக் காணப்பட்டது.

women-received-100-above-parcels

பின்னர், இது ஏதோ புதுவிதமான ஆன்லைன் ஸ்கேம் போல அல்லது வியாபாரிகள் தங்களது விற்காமல் தேங்கி போன பொருள்களை காலி செய்வதற்காக இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, இந்த பார்சல்களை என்ன‌ செய்வதென்று தெரியாமல் காரில் எடுத்து கொண்டு சாலையில் வருபவர்கள், போபவர்கள் மற்றும் அருகில் இருக்கும் பள்ளி, நாய்கள் பாதுகாப்பகம் என அனைவருக்கும் கொடுத்துள்ளார்.‌ இந்த சம்பவம் தற்பொழுது பேசுபொருளாகி உள்ளது.