பெண்களுக்கு சூப்பர் நியூஸ்.. இந்த மாதம் உரிமை தொகை ரூ.1000 முன்கூட்டியே உங்கள் அக்கவுண்ட்டிற்கு வரும்!
மகளிர் உரிமை தொகை ரூ.1000 இந்த மாதம் முன்கூட்டியே வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
உரிமை தொகை
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
குட் நியூஸ்
இந்நிலையில், விண்ணப்பிக்கும்பொழுது பல பெண்கள் நிராகரிக்கப்பட்டனர். அவர்களுக்காக மேலும் விண்ணப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களில் 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தற்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த மாதம் 14ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏனெனில் இந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதனால் ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.