பள்ளி சிறுவனை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்த 3 குழந்தைகளின் தாய் - கதறிய பெற்றோர்!
இளம்பெண், பள்ளி மாணவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சிவகங்கை, மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண், தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இவரது கணவர் வெளியூரில் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த மாணவனும், இளம்பெண்ணும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி வீட்டில் சந்தித்து வந்துள்ளனர்.
இளம்பெண் கைது
இந்நிலையில், சில நாட்களாக அந்த மாணவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சோர்வாக இருந்திருக்கிறார். யாரிடமும் சரிவர பேசவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது உறவினரான அந்தப் பெண் தன்னை மிரட்டி 3 மாதங்கள் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீஸார் அந்தப் பெண்ணை போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.