சிறையில் கர்ப்பமாகும் கைதிகள்; ஆண்களுக்கு தடை விதிக்கணும் - நீதிமன்றத்தில் வழக்கு!

Pregnancy West Bengal
By Sumathi Feb 09, 2024 12:12 PM GMT
Report

சிறையில் கைதிகள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கைதிகள் கர்ப்பம்

மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி என்பவர், கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சிறையில் கர்ப்பமாகும் கைதிகள்; ஆண்களுக்கு தடை விதிக்கணும் - நீதிமன்றத்தில் வழக்கு! | Women Pregnant In West Bengal Jails

அதில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்; காதலர் இவர்தான் - ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்; காதலர் இவர்தான் - ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

196 குழந்தைகள்

இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வில்,

சிறையில் கர்ப்பமாகும் கைதிகள்; ஆண்களுக்கு தடை விதிக்கணும் - நீதிமன்றத்தில் வழக்கு! | Women Pregnant In West Bengal Jails

சிறைத்துறையின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி, ஆறு வயதுக்குக் குறைவான குழந்தையுடன் இருக்கும் பெண் கைதுசெய்யப்பட்டால், அந்தக் குழந்தை தாயுடன் தங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், சிறைகளில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை.

இது சாத்தியமுமில்லை. இது என் கவனத்திற்கு வந்தால், கண்டிப்பாகப் பரிசீலிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து இந்த வழக்கைத் திங்கள்கிழமைக்கு, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.