துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - எஸ்.ஐயால் பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம்!

Sexual harassment Telangana Crime
By Swetha Jun 21, 2024 08:19 AM GMT
Report

துப்பாக்கி முனையில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை

தெலங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பவானிசென் கவுட் என்ற எஸ்.ஐ பணிபுரிகிறார். இவர் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - எஸ்.ஐயால் பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம்! | Women Police Got Sexually Assaulted By Si Gunpoint

இது தொடர்பாக பெண் தலைமை காவலர் கூறுகையில்,``ஜூன் 16-ம் தேதி நீர்ப்பாசனத் திட்டத்தின் விருந்தினர் அறையில், துப்பாக்கிமுனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உதவி கேட்க போனேன்...துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - பிரஜ்வல் மீது தொடர் வழக்கு!

உதவி கேட்க போனேன்...துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - பிரஜ்வல் மீது தொடர் வழக்கு!

துப்பாக்கி முனையில்..

இது மட்டுமல்லாமல், நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் மூன்று பெண் போலீஸாரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எஸ்.ஐ பவானிசென் கவுட் மீது தொடர் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட 42 வயது பெண்ணின் புகாரின் பேரில், எஸ்.ஐ பவானிசென் கவுட்டின் துப்பாக்கியை போலீஸார் கைப்பற்றி அவரை காவலில் எடுத்தனர்.

துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - எஸ்.ஐயால் பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம்! | Women Police Got Sexually Assaulted By Si Gunpoint

பெண் காவலரின் புகாரைத் தொடர்ந்து, பவானிசென் கவுட் மீது ஐபிசி பிரிவு 376(2) (A) (B), 324, 449, மற்றும் 506 மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 27 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, எஸ்.ஐ பவானி சென் கவுட்டை பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.