மாநகர அதிகாரியை பொது மக்கள் முன் பளார்னு அறைந்த எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ!

BJP India Maharashtra
By Vinothini Jun 21, 2023 09:35 AM GMT
Report

பொது மக்கள் முன்னிலையில் மாநகர அதிகாரியை எம்.எல்.ஏ பளார் என்று அறைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எம்.எல்.ஏ

மகாராஷ்டிர மாநிலம், மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ-வாக கீதா ஜெயின் என்ற பெண் உள்ளார். இவர் முன்னாள் பாஜக மேயராக இருந்தவர், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

women-mla-slapped-municipal-engineer

இதனிடையே, மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியாதாக கூறப்படுகிறது. அதனால் அந்த தொகுதி மக்கள் எம்.எல்.ஏ-வான கீதா ஜெயினிடம் வந்து கூறியுள்ளனர்.

வைரல் வீடியோ

இந்நிலையில், பொதுமக்கள் கூறியதை கேட்டு சம்பவ இடத்திற்கு கீதா சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாநகர அதிகாரிகளிடம் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்பொழுது அந்த அதிகாரிகளில் ஒருவர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா யோசிக்காமல் சட்டென அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.