அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற திமுக எம்.எல்.ஏ - பள்ளத்தில் சரிந்து மின் கம்பத்தில் சாய்ந்ததால் பதறிய மக்கள்
காஞ்சிபுரம் அருகே கீழ் கதிர்பூரில் எம்.பி செல்வம் மற்றும் திமுக எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பேருந்தை ஓட்டிச் சென்று பள்ளத்தில் இறக்கிய திமுக எம்எல்ஏ
தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திமுக எம்.எல்.ஏ எழிலரசன் அரசுப் பேருந்தை இயக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த மின் கம்பத்தில் சாய்ந்து நின்றது.
இதனால் பேருந்தில் இருந்த மக்கள் பதறிப்போயின. பின்னர் சாய்ந்து நின்ற பேருந்தில் இருந்து எம்.எல்.ஏ எழிலரசனை கட்சியினர் கை தாங்கலாக இறக்கினர்.
பின்னர் பள்ளத்தில் சரிந்து மின் கம்பத்தில் சாய்ந்து நின்ற பேருந்தை பேருந்து ஓட்டுநர் மீட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.