Monday, May 5, 2025

ஆடி ஆஃபரில் ஆயில் மசாஜ்... கூப்பிட்டு ஆப்பு வைத்த பெண் - மிரளவைக்கும் சம்பவம்!

Tamil nadu Chennai Crime
By Vinothini 2 years ago
Report

ஆயில் மசாஜ் என்று கூறி ஒருவரை வரவழைத்து பெண் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணுடன் நட்பு

சென்னை, அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 25 வயதான இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்துக்கு வீட்டில் இளம்பெண் ஒருவர் உள்ளார் அவருடன் பழகியுள்ளார். சில நாட்களில் இருவரும் நெருக்கமாகியுள்ளனர்,

women-looted-by-fakinng-man-oil-massage-center

அப்பொழுது அந்த பெண் எங்கும் வேலை செய்கிறார் என்பதை கேட்டார், அப்பொழுது அவர் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், அவர் மசாஜ் சென்டரில் என்ன செய்வார்கள் என்பதை குறித்து அறிந்துகொண்டார். பின்னர், அந்த பெண் பல மசாஜ் சென்டர்கள் பற்றி அனுப்ப அங்கெல்லாம் இந்த இளைஞர் சென்றுள்ளார்.

ஆயில் மசாஜ்

இந்நிலையில், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது, அப்பொழுது அந்த இளைஞர் விலகி விட்டார். இதனால் பழிவாங்க நினைத்த அந்த இளம்பெண் வேறொரு மசாஜ் சென்டரில் இருந்து அனுப்புவதுபோல, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த இளைஞருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், கால் செய்து "எங்கள் ஸ்பாவில் ஆடி ஆஃபர் தருகிறோம், அதனால் கட்டணமும் குறைவு.

women-looted-by-fakinng-man-oil-massage-center

ஒருமுறை வந்து பாருங்கள்" என்று அழைத்துள்ளார். இவரும், அந்த மசாஜ் சென்டருக்கு சென்றிருக்கிறார், அங்கு இந்த இளம்பெண்ணுடன், 5 இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்கிவிட்டு நிர்வாணமாக்கி, தவறு செய்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று எழுதி வாங்கி கொண்டு, இளைஞரிடமிருந்த 15,000 ரூபாயையும், டெபிட் கார்டில் இருந்து, 3,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகினர்.

பின்னர் இது குறித்து, அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார், விசாரணையில் அவர் பெயர் ஆண்டன் பெனினா, எஸ்கேப் ஆகிய அவர் மும்பையில் உள்ளது தெரியவந்தது. இவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.