பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தால் எழுந்த சிக்கல்...கணவனை விட்டு காதலர்களுடன் ஓடிய பெண்கள்!
வீடு கட்டும் திட்டத்தில் வழங்கிய பணத்தை வைத்து கள்ளகாதலர்களுடன் பெண்கள் ஓடியது சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டும் திட்டம்
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு மத்திய அரசின் பல் திட்டங்களில் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒன்று தான் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்.
இதன்மூலம், வீடில்லா மக்களுக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் பகுதியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் முதல் தவணை தொகையை பெற்ற 11 பெண்கள் தங்களின் கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகி உள்ளனர்.
ஓடிய பெண்கள்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பணத்தை எடுத்து கொண்டு ஓடிய 11 பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் இல்லாததால் மேற்கொண்டு வீட்டு வேலையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அடுத்த கட்டமாக இந்த 11 பயனாளிகளுக்கும் பணம் ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2,350 பயனாளர்களுக்கு வீடு காட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அடுத்து இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணை பணம் கொடுப்பத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.