சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை - அப்பெண்ணின் தங்கை உட்பட 5 பேர் கைது!
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொடூர கொலை
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 35 வயதான இவர் சென்னை மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார். சென்னை தாம்பரத்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தது. அப்பொழுது கடற்கரை வந்ததும் பயணிகளுக்கு இடையே இந்த பெண்ணும் இரங்கியுள்ளார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மறைந்து வந்து அரிவாளால் இவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீவிர விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து, இந்தியாக கொலை வழக்கில் ஈடுபட்ட நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் நாகவள்ளி கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.