மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் மா.சுப்பிரமணியம் பேட்டி
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கிண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் கூறியதாவது, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைப் பெண்களுக்கு 1500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் போன்ற பல்வேறு மக்களுக்கு தேவையான வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்.
எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்த சைதாப்பேட்டை தொகுதி மக்கள் தனக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள் என கூறினார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களை நான் யாரையும் போட்டியாக பார்க்கவில்லை நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன் எனக் கூறியவர்.
சைதாப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியை ஒரு ரூபாய் பணம் கூட மீதம் இல்லாமல் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன் என்றார்.