கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவரை கல்லை போட்டு கொன்றுவிட்டு மனைவி ஆடிய நாடகம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்து உள்ள கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 35 வயதான இவருக்கு 34 வயதில் அமலா என்ற மனைவி உள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இதில் அமலா கணவரின் நண்பர் ரமேஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார், அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இது பற்றி அவரது கணவருக்கு தெரியவர அவர் அமலாவை கண்டித்துள்ளார்.
கொலை
இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனால், மது அருந்திக்கொண்டிருந்த விநாயகமூர்த்தி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர், கிணற்றில் விழுந்து உயிரிழந்தது போல் செய்துள்ளனர். பின்னர், விசாரணையில் இறந்த நபரின் மனைவி அமலா மற்றும் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், ரமேஷ் மற்றும் அமலா ஆகிய இருவருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தடயத்தை அழித்ததற்காக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான்சுந்தர்லால் தீர்ப்பு வழங்கினார்.