கள்ளக்காதலனுடன் உல்லாசம் - இடையூறாக அழுத குழந்தையை அடித்து கொன்ற கொடூரம்!
தனது கள்ளக்காதலன் உடன் இருக்கும்பொழுது இடையூறாக அழுத குழந்தையை இருவரும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
சேலம் மாவட்டம், சிக்கம்பட்டி புதூரில் உள்ள காடம்பட்டி பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லேஷ் என்பவரிடம், கலைவாணி என்ற பெண் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வந்து வேலை கேட்டுள்ளார்.
அவர்களுக்கு செங்கல் சூளையில் கூலி வேலை கொடுக்கப்பட்டது. இதனால் குழந்தையுடன் இருவரும் அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்தனர்.
இதில் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறியுள்ளது.
கொடூர சம்பவம்
இந்நிலையில், சம்பவம் நடந்த நாளில் குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கேட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று இருவரும் கூறி விட்டனர். பின்னர் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேஷ், கலைவாணி இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த பெண் ஈரோடு மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர், தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றும். அவர், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மல்லேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் இடையூறாக இருந்த குழந்தையை அடித்ததாக கூறப்பட்டது.