வரம்பு மீறிய உல்லாச வாழ்க்கை..! 4வது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை பார்த்த 3வது கள்ளக்காதலன் - கடைசியில் நடந்த விபரீதம்

Chennai Tamil Nadu Police Death
By Thahir Mar 29, 2023 05:01 AM GMT
Report

4வது கள்ளக்காதலனுடன் தனது கள்ளக்காதலி உல்லாசமாக இருப்பதை பார்த்த 3வது கள்ளக்காதலன் பெண்ணை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3வது ஆணுடன் தொடர்பு 

சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (40) இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார்.

இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் இவரது இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார்.

கணவர் இறந்ததை அடுத்து முருகன் என்பவரை மல்லிகா 2வது திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Woman beaten to death for cheating

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2வது கணவர் முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் வீட்டிற்கு வந்து மல்லிகாவுடன் உல்லாசமாக இருந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், மல்லிகாவை பார்க்க அவரது மகன் கடந்த 26 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் மல்லிகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையில் முடிந்த கள்ளக்காதல் 

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கண்ணி நகரைச் சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மல்லிகாவின் முதல் கணவர் இறந்ததை அடுத்து முருகன் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த போது கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இவருக்கு தெரியாமலே பாண்டியன் என்பவருடன் மல்லிகா தொடர்பில் இருந்துள்ளார்.

இ்ந்த நிலையில் மல்லிகா வீட்டிற்கு ஜெயக்குமார் சென்ற போது அங்கு பாண்டியன் உடன் மல்லிகா உல்லாசமாக கட்டி புரண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Woman beaten to death for cheating

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ஜெயக்குமார், பாண்டியன் வெளியே சென்றதும் வீட்டிற்குள் நுழைந்த ஜெயக்குமார், மல்லிகாவை மது பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.