காதலுக்கு எதிர்ப்பு..13 பேர் கொண்ட தனது குடும்பத்தையே கொடூரமாக கொன்ற பெண் !

Pakistan Death World
By Swetha Oct 07, 2024 07:30 AM GMT
Report

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தை பெண் ஒருவர் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பு..

பாகிஸ்தானில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஒரே சமயத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. பிறகு அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு..13 பேர் கொண்ட தனது குடும்பத்தையே கொடூரமாக கொன்ற பெண் ! | Women Killed Her Family By Mixing Poison In Food

ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனையில் அவர்கள் அனைவரும் சாபிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


கொன்ற பெண்

அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியவந்தது.

காதலுக்கு எதிர்ப்பு..13 பேர் கொண்ட தனது குடும்பத்தையே கொடூரமாக கொன்ற பெண் ! | Women Killed Her Family By Mixing Poison In Food

அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இளைஞரை திருமணம் செய்து வைக்கவும் மறுத்தனர். இதனால் கடும் கோபமடைந்த இளம்பெண், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்ட முடிவெடித்தார்.

இதற்கான திட்டத்தை தனது காதலன் யோசனைபடி அரங்கேற்றினார். அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்தார். இதையறியாமல் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.