தோசை கல், பூரிகட்டையால் அடித்து கணவனை கொன்ற பெண் - மிரளவைக்கும் காரணம்!
தோசைக்கல், பூரிகட்டையால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கொன்ற பெண்..
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர், ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி கனிமொழி (30).
இந்த தம்பதிக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில், கார்த்திக் மதுபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், அப்போது குழந்தைகளையும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஷாக் காரணம்
இந்த நிலையில், நேற்று மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்து குழந்தைகளையும் தாக்கினாராம். இதனால், ஆத்திரம் அடைந்த கனிமொழி, சப்பாத்திக்கட்டை மற்றும் தோசைக்கல்லால் கார்த்திக்கை தாக்கினார். அரிவாள் மனையாலும் அவரை வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த தகவலறிந்து அங்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திக்கின் உடலை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கனிமொழியிடம் போலீசார் விசாரித்தபோது, குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால் ஆத்திரத்தில் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கனிமொழியை கைது செய்தனர்.