தோழி உட்பட சைனைட் கொடுத்து 14 பேரை கொன்ற பெண் - கொடூர பின்னணி!
சைனைட் கலந்து 14 பேரை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சைனைட் கொலை
தாய்லாந்தை சேர்ந்தவர் சராரட் ரங்சிவுதாபோர் ( 36) என்ற பெண். இவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அடிக்கடி பிறரை எமாற்றில் பணப்பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பணம் பறித்த பிறகு அந்த நபர்களை சைனைட்டைப் பயன்படுத்தி அவர்களைக் கொன்றதாக சராரட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், தனது தோழியையும் இவ்வாறு சைனைட் வைத்து கொன்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் சராரட், தனது தோழியான சிரிபோர்ன் கன்வோங்க் சந்தித்துள்ளார். இருவரும் பௌத்த சமய சடங்கின்படி மே கிலோங் ஆற்றில் மீன்களை விடுவித்தனர். சிறிது நேரம் கழித்து சிரிபோர்ன் மயங்கி விழுந்து அங்கேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிரிபோர்னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில் சராரட் தோழியான சிரிபோர்னின் உடலில் சைனைட் நஞ்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அதற்கு முன்பு நடந்த பல ‘சைனைட்' கொலைகளுக்கும் சராரட்டுக்கும் தொடர்பு இருந்ததை போலீசார் உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த அந்த கொலைகளுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கொடூர பின்னணி
இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், 'சைனைட்' நஞ்சைக் கலந்து கொடுத்து தமது தோழியைக் கொன்ற குற்றத்துக்காக சராரட்க்கு கடந்த 20ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
36 வயது சராரட் ரங்சிவுதாபோர்னுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள 14 வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசரணைக்கு பிறகு வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிரிபோர்னின் தாயாரான தொங்பின் கியாட்சனாசிரி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “நீதிமன்றத் தீர்ப்பு நியாயமானது. என் மகளைப் பார்க்க முடியாமல் ஏங்கித் தவிக்கிறேன் என்றும் இன்று அவளுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்றும் அவளிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சூதாட்டப் பழக்கத்துக்குத் தேவையான பணத்தை சராசரட் மொத்தம் 15 பேரிடமிருந்து கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. பிறகு அவர்களில் 14 பேரை 'சைனைட்' பயன்படுத்தி கொன்று
அவர்களிடமிருந்த நகை, கைப்பேசிகள் ஆகியவற்றை சராரட் திருடியதாகக் காவல்துறை உறுதிப்படுத்தி கூறியுள்ளது. அந்த நபர்களில் ஒருவர் உயிர்பிழைத்ததாக தெரிவித்துள்ளனர்.