இளம்பெண் கொலை? ஹிஜாப்பை கழற்றி எரிந்து வெடிக்கும் போராட்டம்!

Viral Video Iran
By Sumathi Sep 18, 2022 06:55 AM GMT
Report

ஹிஜாப் அணியாத்தால் இளம்பெண் காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பேராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்

ஈரான், குர்திஸ்தானை சேர்ந்தவர் மாஷா அமினி (வயது 22) ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.

இளம்பெண் கொலை? ஹிஜாப்பை கழற்றி எரிந்து வெடிக்கும் போராட்டம்! | Women Intensify Protest Against Strict Hijab Laws

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன. இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

பெண் மர்ம மரணம்

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

வெடிக்கும் போராட்டம்

நேற்று மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதில் ஆளும் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய அவர்கள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலாச்சார காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.