ஹிஜாப் சரியாக அணியவில்லை - இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீஸார்!

Iran Viral Photos Death
By Sumathi Sep 17, 2022 09:37 AM GMT
Report

ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை போலீஸார் தாக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்

ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் சரியாக அணியவில்லை - இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீஸார்! | 22 Year Old Iran Woman Arrested Over Hijab

இந்நிலையில், 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் மேற்கு ஈரான் பகுதியான குர்திஸ்தான் பகுதியில் இருந்து தெஹ்ரானுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். நெறிமுறை காவல்துறையினர் அந்த பெண் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்துள்ளனர்.

பெண் மரணம்

இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததால் அவரை கைது வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். இதில், அந்த இளம்பெண் சிறைக்கு கொண்டு செல்லும்போது கண்டித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹிஜாப் சரியாக அணியவில்லை - இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீஸார்! | 22 Year Old Iran Woman Arrested Over Hijab

கைது செய்யப்பட்டு சில மணி நேரத்தில் அந்த பெண் மயங்கி விழுந்ததாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் கோமாவில் இருப்பதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஈரான் உச்சபட்ச தலைவர் அயோதா அல் காமேனி மற்றும் அதிபர் இப்ராஹிம் ரைசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்து வருகின்றனர்.