"அரசியலமைப்பு தான் எங்களுக்கு பகவத் கீதை" - ஹிஜாப் வழக்கு விசாரனையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமறத்தில் ஹிஜாப் சர்ச்சை குறித்த வழக்கு விசாரனை இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
வழக்கை விசாரித்து வரும் கர்நாடகா உயர்நீதிமன்றம், "நாங்கள் பகுத்தறிவின்படியும் சட்டத்தின்படியும் தான் செல்வோம், உணர்ச்சிகளால் அல்ல. அரசியலமைப்பு தான் எங்களுக்கு பகவத் கீதை " என தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹிஜாப் சர்ச்சை போராட்டத்தை அதிகரித்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மாணவர்கள் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.