இந்த 5 நாட்கள் ஆடை அணியாத பெண்கள், அதுவும் இந்தியாவில்.. ஏன் தெரியுமா?
இந்த கிராமத்தில் பெண்கள் 5 நாட்கள் ஆடையே அணியமாட்டார்களாம்.
பினி கிராமம்
இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் மணிகாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் பினி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு மழைக்கால மாதமான சவான் மாதத்தில் குறிப்பிட்ட
ஐந்து நாட்களுக்கு இந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் யாரும் எந்த உடையும் அணியக் கூடாது. அதனை மீறி அணிபவர்களுக்கு கெட்டது நடக்கும் என நம்பப்படுகிறது. மேலும், கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளக் கூடாது.
பாரம்பரிய வழக்கம்
அதோடு கணவனும் மனைவியும் தனித்தனியே இருக்க வேண்டும். தொடர்ந்து, இந்த ஐந்து நாட்களில் கிராமத்தில் இருக்கும் ஆண்கள் மது அருந்தக் கூடாது. அசைவம் சாப்பிடக் கூடாது. இதை தங்களின் பாரம்பரிய வழக்கம் என்கிறார்கள். முன்பு ஒரு காலத்தில், இந்த கிராமத்தை சில பிசாசுகள் பிடித்திருந்ததாம்.
அப்பொழுது லூனா கோத் தேவி அந்த கிராமத்திற்கு வந்ததும் பிசாசுகள் எல்லாம் அழிந்ததாம். அழகாக ஆடை உடுத்தியிருந்த பெண்களை பிசாசுகள் பிடித்து செல்லும் என்றும், அதை நினைவில் வைத்து 5 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் காலத்தில் வெளியாட்கள் யாரையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. இவர்களின் இந்த சிறப்பு விழாவில் வெளியூர் மக்கள் யாராலும் பங்கேற்கவும் முடியாது.