Wow... குப்பையில் எறியப்பட்ட குளிர்பான கேன் மூடிகளால் செய்த ஆடையை அணிந்து வந்த பிரபஞ்ச அழகி...!
பிரபஞ்ச அழகி போட்டி
வரும் ஜனவரி14ம் தேதி நடைபெற இருக்கும் பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் திவிதா ராய் கலந்து கொள்ள உள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வருவர்.
அந்த வகையில் இந்தியா சார்பில் திவிதா ராய், இறக்கைகளுடன் கூடிய அற்புதமான தங்க நிற லெஹங்கா அணிந்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மூடிகளால் செய்த ஆடையை அணிந்து வந்த அழகி
2022ம் ஆண்டு தாய்லாந்து அழகி Anna Sueangam மேடையில் வித்தியாசமான உடையை அணிந்து வந்ததால் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின்போது அவர், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார். பலரால் மதிப்பிழந்ததாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்ட பொருள்கள் உண்மையிலேயே என்னுடைய மதிப்பையும் அழகையும் அதிகரித்துள்ளன அவர் மேடையில் உருக்கமாக பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது.
இந்நிலையில், அன்னா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், தெருவை சுத்தம் செய்யும் தாயிக்கும் மகளாக பிறந்தவள் நான். குப்பை என் வாழ்வில் புதிது கிடையாது. குப்பைகளுடனும், மறுசுழற்சி செய்யும் பொருள்களுடனும் வாழ்ந்தவள் நான்.
சிறுவயது முதலே என்னைச் சுற்றியிருந்த பொருள்களைக் கொண்டு செய்த உடையை நான் அணிந்து வந்துள்ளேன். பலரால் மதிப்பிழந்ததாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்ட பொருள்கள் உண்மையிலேயே தன்னுடைய மதிப்பையும் அழகையும் இப்போது எனக்குள் இருந்து காட்டுகின்றன. அந்த உடையின் அழகைப் பார்த்தவர்களுக்கும், என் பேச்சைக் கேட்டவர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.