மனைவிக்கு பணம் கொடுத்த நபர்..அந்தரங்க உறுப்பை தாக்கிய கள்ளக்காதலி - கொடூர சம்பவம்!
பெண் ஒருவர் இளைஞரின் அந்தரங்க உறுப்பை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
தாக்கிய காதலி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஆந்திரவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஏனினும் கடந்த 4 மாதங்களாக, சீதா குமாரி என்ற பெண்ணுடன் லிவ் இன் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே விஜய்குமார் வியாபாரம் செய்து தனக்கு கிடைக்கும் பணத்தை சொந்த ஊரில் வசிக்கும் தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் சீதாகுமாரிக்கு தெரியவந்த நிலையில், விஜய்குமார் மீது கடும் கோபத்தில் அவர் இருந்து வந்திருக்கிறார்.
மேலும், இது குறித்து சீதா குமாரி, விஜய்குமாரிடம் பல முறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில், இரவு விஜய்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சீதா குமாரி, விஜய்குமாரின் கை கால்களை கட்டிபோட்டு,
கொடூர சம்பவம்
அவரது அந்தரங்கை உறுப்பை கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து, விஜய்குமார் தாக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு சீதாகுமாரி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் பிறகு, வீட்டின் உரிமையாளர்,
விஜய்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.