அந்தரங்க உறுப்பை பெரிதாக்க... நேர்ந்த பரிதாபம் - வசமாக மாட்டிய நபர்!
ஆணுறுப்பை பெரிதாக்க நினைத்து, இரும்பு வளையத்தை மாட்டி அதை வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபரீத முடிவு
தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆணுறுப்பைப் பெரிதாக்க நினைத்து முயற்சிகள் எடுத்துள்ளார். அதற்காக இரும்பு வளையத்தை தனது உறுப்பில் மாட்டியுள்ளார். நான்கு மாதங்களாக அதை உறுப்பில் மாட்டியிருந்த அவருக்கு, ரத்த ஓட்டம் குறைந்த காரணத்தால் அதில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த இரும்பு வளையத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதை அவரால் எடுக்க முடியவில்லை. அதனையடுத்து, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் இந்தச் சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேர்ந்த பரிதாபம்
மேலும், பிறப்புறுப்பில் இருந்து இரும்பு வளையத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதை அகற்ற மருத்துவர்களால் முடியவில்லை. எனவே, மருத்துவர்கள், உள்ளூர் தீயணைப்பு வீரர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் வெல்டிங் கட்டர்கள் மற்றும் பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி, பாதுகாப்பாக அந்த இரும்பு வளையத்தை அகற்றினர். இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில்,"சரியான நேரத்தில் அந்த இரும்பு வளையம் அகற்றப்பட்டது.
அதிர்ச்சி சம்பவம்
இல்லையென்றால், அது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சொல்லப்போனால், அவரின் பிறப்புறுப்பு துண்டித்திருக்கவும் வாய்ப்புள்ளது" என்றனர். அந்த இரும்பை வெட்டியெடுத்த தீயணைப்பு வீரர்களுள் ஒருவர் கூறுகையில்,
"அதை அகற்ற ஒரு மணிநேரம் போராடினோம். அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, இதுபோல் நான்கு ஆண்டுகளாக செய்து வருவதாகவும், இந்த முறைதான் இப்படி நடந்துவிட்டதாகவும் கூறினார்" என்றார். தொடர்ந்து, ஒரு வார கால சிகிச்சைக்கு பின் அந்த நபர், குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.