தொடர்ந்து 5 பேர் மரணம்; கணவரின் குடும்பத்தையே கொன்ற பெண் - பகீர் பின்னணி!
ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தந்தை தற்கொலை
மகாராஷ்டிரா, கட்சிரோலியின் மஹாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய விஞ்ஞானி சங்கர். இவரது குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். சங்கர் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து சங்கரின் மகன், மகள் மற்றும் உறவினர் என 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பழிவாங்கிய மருமகள்
அப்போது, குடும்பத்தில் மீதமிருந்த சங்கரின் மருமகள் சங்கமித்ராவிடன் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், அவரது செல்போனில் விஷம் தொடர்பான தகவல்களை தேடியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், சங்கமித்ராவின் தந்தை அண்மையில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு தனது கணவர், மாமியார், மாமனார் தான் காரணம் என்பதால் அவர்களை பழி வாங்க சங்கமித்ரா முடிவு செய்துள்ளார்.
அதனையடுத்து, தனது தோழி ரோஜா என்பவருடன் கூட்டு சேர்ந்து தெலங்கானா சென்று அந்த கொடிய விஷத்தை வாங்கியுள்ளார். அதனை ஒவ்வொருவருக்கும் உணவில் கலந்து கொடுத்துள்ளார்.
அதில் 5 பேரும் இறந்துள்ளனர்.
வலி மிகுந்த மரணத்தை கணவர் குடும்பம் அடைய வேண்டும் என இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சங்கமித்ரா மற்றும் அவரது தோழியை கைது செய்துள்ளனர்.