20 ஆண்டுகளாக மலம் கழிக்கவில்லை - மருத்துவர்களை மிரளவைத்த பெண்!
பெண் ஒருவர் பல ஆண்டுகளாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல சிக்கல்
சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் 20 வருட காலமாக மலம் கழிக்காமல் இருந்துள்ளார். அவருக்கு திடீரென கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, அப்பொழுது மருத்துவரை அணுகியுள்ளார். அவர் 20 வருடங்களாக மலம் கழிக்காமல் இருந்தது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தியது.
தொடர்ந்து, அந்த பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்தனர், அப்பொழுது அவருக்கு பிறப்பிலிருந்தே மல சிக்கல் இருந்துள்ளது தெரியவந்தது. தற்பொழுது உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள Zhejiang பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவர்கள் சிகிச்சை தொடங்கியதும் தொடர்ந்து அவரது வயிற்றில் 3 அறுவை சிகிச்சை செய்தனர்.
அவர் வயிற்றில் உள்ளதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். அதில் சுமார் மூன்று அடி நீளத்திற்கு ஒரு பெரிய கால்பந்தின் அளவில் சுமார் 20 கிலோ கழிவுகள் அவருடைய வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், இத்தனை கழிவுகளை எப்படி இந்த பெண் தாங்கி வந்தார் என்று மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.