பேருந்து நிலையத்தில் பெண் பயணி..தகாத முறையில் நடந்த நபர் - தாமதமாக வந்ததா போலீஸ்?
பெண் பயணியிடம் போதையில் இருந்த நபர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பயணி
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் சுமதி. இவரது கணவர் அறிவுக்கரசு.இவர்கள் இருவரும் தனது மகன் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க திண்டுக்கல் சென்றுள்ளனர். வேலை முடிந்ததும் தனது ஊருக்கு திரும்ப கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
அப்போது பேருந்துக்காக ஒரு மணி நேரம் மேலாக காத்திருந்த நிலையில், சுமதியை ஒரு சில மர்ம நபர்கள் மதுபோதையில் தவறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் தன்னை பாதுகாத்துக்கொள்ள சுமதி கால்களால் எட்டி உதைத்துள்ளார்.
மது போதையில் இருக்கும் நபர்களை தாக்கினால் பிரச்னை ஏற்படும் என்று கூறி, பேருந்து நடத்துனர் போலீஸாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து, ரூர் பேருந்து நிலையத்தில் புகார் அளிப்பதற்காக போலீஸாரை தேடி அலைந்துள்ளார்.
தகாத முறையில்..
சி.சி.டி.வி ரோந்து வாகனத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவதிக்குள்ளாகி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.இதன் பிறகு, காவல் உதவி மையம் 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்ததும் 1 மணி நேரம் கழித்தே அப்பகுதிக்கு போலீஸார் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் போலீஸார் பேச்சுவார்த்தையில் நடத்தியபோது, ஒரு போலீஸார்கூட இல்லாததால் புகார் தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, போலீசார் சுமதியை ஆசுவாசப்படுத்தி சேலம் மார்க்கமாகச் செல்லும் பேருந்தில் போலீஸார் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.