Friday, Jul 11, 2025

உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை - வாலிபர் அதிரடி கைது

sexualharassment manarrested jolarpet chennailawyer harassmentintrain
By Swetha Subash 3 years ago
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரின் மனைவி ஹெப்சிபா(44), இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் மாவட்ட நீதிபதி தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொள்ள பெங்களூரு சென்று மீண்டும் 10-ம் தேதி இரவு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து காவிரி எக்ஸ்பிரஸில் எஸ்11 கம்பார்ட்மெண்டில் பயணம் செய்தார்.

உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை - வாலிபர் அதிரடி கைது | Man Arrested Over Sexual Harassment In Train

அதை கம்பார்மெண்டில் பயணம் செய்த திருவள்ளுவர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கந்தன் (26) என்பவர் பெண் வக்கீலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வக்கீல் மற்றும் சில பயணிகள் அந்த நபரை பிடித்து அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை - வாலிபர் அதிரடி கைது | Man Arrested Over Sexual Harassment In Train

மேலும் சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்டதால் இந்த வழக்கு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் கந்தன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.