பஞ்சாயத்தில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, முடியை வெட்டி சித்ரவதை - கொடூர தண்டனை!

Uttar Pradesh India Crime
By Swetha Jul 29, 2024 03:30 PM GMT
Report

பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்து

உத்தர பிரதேச மாநிலம் சோட்கி இப்ராடிஹிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்த பெண். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளன.

பஞ்சாயத்தில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, முடியை வெட்டி சித்ரவதை - கொடூர தண்டனை! | Women Got Cruely Punished By Panchayat For Affair

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ள தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தொடர்பில் இருந்த ஆணுக்கும் ஏற்கனவே திருமண ஆகி 4 குழந்தைகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது.

நடுக்காட்டில் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட கொடூரம் - மஹாராஷ்டிராவில் தமிழ்நாடு பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!!

நடுக்காட்டில் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட கொடூரம் - மஹாராஷ்டிராவில் தமிழ்நாடு பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!!

கொடூர தண்டனை

பஞ்சாயத்தின் உத்தரவின் பேரில், அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலைமுடி வெட்டப்பட்டு, முகத்தில் கருப்பு மை பூசி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு இந்த தண்டனை இழைக்கப்படும்போது, தொடர்பில் இருந்த ஆண் அவரை காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

பஞ்சாயத்தில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, முடியை வெட்டி சித்ரவதை - கொடூர தண்டனை! | Women Got Cruely Punished By Panchayat For Affair

அவரை அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் தப்பி ஓடவும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனே அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

காவல் நிலையப் பொறுப்பாளர் நந்த் லால் சிங் அளித்த புகாரின் பேரில், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.