நடுக்காட்டில் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட கொடூரம் - மஹாராஷ்டிராவில் தமிழ்நாடு பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!!
மரத்தில் கட்டப்பட்டு
மகாராஷ்டிராவின் சாவந்த்வாடி தாலுகாவில் உள்ள சோனூர்லி கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் ஒரு வெளிநாட்டுப் பெண் சனிக்கிழமையன்று ஒரு மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அதிகாலையில் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் அவரை கண்டுப்பிடித்துள்ளார்கள். உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் கொடுத்ததுடன், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, மரத்தில் கட்டப்பட்டிருந்த வெளிநாட்டு பெண்ணைக் மீட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட போது அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்.
பல நாட்களாக அவர் எதுவும் சாப்பிடாமல் எதுவுமே குடிக்கவில்லை என்பது போல் தோற்றத்தில் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவர், தீவிர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். இது குறித்து கால்நடை மெய்ப்பாளர்கள் கூறும் போது, அவர்கள் கால்நடைகளை அதிகாலையில் மேய்த்து சென்றபோது, காட்டில் ஒரு பெண் அழும் சத்தம் கேட்டது.
பேச முடியாமல்
அங்கு சென்று பார்த்தபோது, மரத்தில் ஒரு பெண் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாள் என அதிர்ச்சியுடன் கூறுகிறார்கள். மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெண் லலிதா கயி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர் ஆவார்.
அவரின் வலது கால் மரத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், அவள் மிகவும் இக்கட்டான சூழலில் கனமழை மற்றும் உணவு இல்லாமல் பல நாட்கள் பெரும் துயரை அவர் எதிர்கொண்டுள்ளார்.
மீட்கப்பட்ட போது அவர் பேசமுடியாத சூழலிலும் இருந்துள்ளார். இதுகுறித்து சாவந்தவாடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.