ரயிலில் மிரட்டல் சாகசம்!! விரட்டி பிடித்த போலீசாருக்கு உண்டான ஷாக் - பரிதமான நிலையில் இளைஞர்

Maharashtra Mumbai
By Karthick Jul 28, 2024 12:23 PM GMT
Report

ரயிலில் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாப நிலை பலருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

ரயில் சாகசம்

வேகமாக பிளாட்பார்மில் இருந்து வந்த ரயில், சாகசம் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ சமீபத்தில் வெளியாகி கடும் வைரலானது. பலரும் அவரின் செயலை கண்டு அதிர்ந்து போனார்.

Mumbai train stunt youngster

பலர் இவர் மீது நடவடிக்கை வேண்டும் என கமெண்ட் செய்த சூழலில், அவரின் உயிருக்கே கூட இது ஆபத்தானது என அறிவுறுத்தல்களும் வெளிவந்தன. மும்பை சேர்ந்தவரான அவரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்தனர். அப்போது தான் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

விபரீதம்

RPF போலீசாரால் அவர் கைது செய்யப்பட்ட போது, அவருக்கு ஒரு கை மற்றும் கால் இல்லாமல் இருந்துள்ளது. Farhat Azam Shaikh என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞன், ஆபத்தான முறையில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மக்களே...தாம்பரம் - செங்கல்பட்டு ரூட் போறீங்களா? நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர ரயில் ரத்து!!

மக்களே...தாம்பரம் - செங்கல்பட்டு ரூட் போறீங்களா? நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர ரயில் ரத்து!!

அப்படி ஒரு முறை செய்த போதே அவருக்கு இந்த விபரீத முடிவு ஏற்பட்டுள்ளது. ​​​​ஏப்ரல் 14 அன்று மும்பையின் மஸ்ஜித் நிலையத்தில் அவர் நிகழ்த்திய ஸ்டண்ட் ஒன்றில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, வெளியாகி வைரலான வீடியோ இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது ஏ என கூறப்படுகிறது.