கால் பாயுடன் ரூமில் இளம்பெண் கொண்ட உல்லாசம் - இறுதியில் செயினால் தெரிந்த உண்மை!
ரூமில் இளம்பெண் உல்லாசம் கொண்ட நபர் நகையை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கால் பாய்
இந்த நவீன காலகட்டத்தில் செல்போனின் பயன்பாடு ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. குறிப்பாக அனைத்து விதமான தேவைகளுக்கும் தனி தனி ஆப்கள் வந்துவிட்டது. அதில் சில நன்மை பயக்கும் என்றால் சிலது தீமை பயக்கும். அந்த வகையில், ஆன்லைனில் டேட்டிங் ஆப் போன்ற பல செயலிகள் இருக்கிறது.
அதேபோல தற்போது கால் பாய் டேட்டிங் செயலிகளும் ஆன்லைனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் இளைஞர்கள் தாங்கள் எடுத்த கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிடுவார்கள். பாலியல் இச்சையை பூர்த்தி செய்ய விரும்பும் பெண்கள் இது போன்ற ஆண்களை வரவழைத்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள்.
அதற்கு அந்த ஆண்ளுக்கு பணம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கூட சென்னையில் கால் பாயாக ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒருவர், ’கால் பாய் டேட்டிங்’ செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகித்துள்ளார். அதில் ஒரு இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்பட அந்த இளைஞரின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.
இளம்பெண்
இதை அடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தான் இருப்பதாகவும் அங்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார். இதையடுத்து அந்த இளம் பெண் அந்த இளைஞரை சந்தித்திருக்கிறார் இருவரும் தனிமையில் இருந்த நிலையில் அவருக்கு மூவாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.
வீட்டுக்கு வந்த பிறகுதான், தான் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அதே நேரத்தில் வெளியே இதை பற்றி சொன்னால் தனக்கு பிரச்சனை வரலாம் என அமைதி காத்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் நகை குறித்து வீட்டில் இருப்பவர்கள் கேட்க தொடங்கியதால் பதற்றமடைந்த அந்தப் பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து,
டேட்டிங் செயலி மற்றும் அந்த இளைஞரின் செல்போன் ஆகியவற்றை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.