10 மாதம்..வெவ்வேறு பிரசவம்; பிறந்த மூன்று குழந்தைகள் - வியக்க வைக்கும் பெண்ணின் கதை !

Viral Video Australia World
By Swetha Aug 29, 2024 08:30 AM GMT
Report

பெண் ஒருவர் பத்து மாதத்தில் வெவ்வெறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

10 மாதம்..

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட் (41). திருமணம் ஆனதும் இவர் கர்ப்பம் ஆகியுள்ளார். அந்த பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறகு 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார்.

10 மாதம்..வெவ்வேறு பிரசவம்; பிறந்த மூன்று குழந்தைகள் - வியக்க வைக்கும் பெண்ணின் கதை ! | Women Gives Birth To 3 Diffrent Child In 10 Months

குறுகிய காலத்தில் தான் மீண்டும் கர்ப்பம் ஆனது பற்றி மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவித்துள்ளனர். சுமார், 30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா ஹோலண்ட் பிரசவ வழி ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - 10-வது பிரசவத்தில் நிறைவேறிய ஆசை!

அடுத்தடுத்து 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - 10-வது பிரசவத்தில் நிறைவேறிய ஆசை!

மூன்று குழந்தை

ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதாவது 2 மாதங்கள் குறை பிரசவத்தில் பிறந்தன. இந்த நிலையில், தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பின. இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

10 மாதம்..வெவ்வேறு பிரசவம்; பிறந்த மூன்று குழந்தைகள் - வியக்க வைக்கும் பெண்ணின் கதை ! | Women Gives Birth To 3 Diffrent Child In 10 Months

அந்த பெண் ஒரு குழந்தை பெற்ற 2வது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் அடைந்து 8வது மாதத்திலேயே மேலும் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.எனவே 10 மாதங்களில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றதால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.