பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்த ஊசி - ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்
பெண்ணின் பிறப்புறுப்பில் ஊசி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்துள்ளனர்.
பிறப்புறுப்பில் வலி
தாய்லாந்தை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவருக்கு 18 வருடங்களாகவே அடி வயிறு மற்றும் பிறப்புறுப்பில் வலி இருந்து வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வலி அதிகரித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவரது பெண் உறுப்பில் ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரசவத்தில் நடந்த தவறு
இதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.18 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கருவுற்று இருந்த போது பிரசவம் பார்த்த செவிலியர், தவறுதலாகப் பெண்ணுறுப்பில் ஊசியை வைத்துள்ளார். ஆபரேஷன் செய்த மருத்துவர் அப்போதே இதைப் பார்த்து தனது விரலால் அந்த ஊசியை எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அவரால் ஊசியை எடுக்க முடியவில்லை. தையல் போடுவதில் தாமதம் ஏற்பட்டால் ரத்த இழப்பு ஏற்பட்டு பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் ஊசியை அப்படியே விட்டுவிட்டு ஆப்ரேஷன் செய்துள்ளனர். இதுவே அந்த பெண்ணுக்கு வலி மற்றும் எரிச்சலை கொடுத்துள்ளது.
அறக்கட்டளை உதவி
தற்போது ஊசி நகர்ந்து கொண்டே இருப்பதால், ஆபரேஷன் 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் அந்த பெண் மாதத்திற்கு 4 முறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததோடு, மருத்துவ செலவு மற்றும் பயண செலவு அதிகரித்தது.
இதை அறிந்த பவேனா அறக்கட்டளை, அந்த பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மீது வழக்கு போடவும் அந்த பெண் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.