3 ஆணுறுப்புடன் வாழ்ந்த மனிதர் - அதிர்ந்த மருத்துவர்கள்
முதியவர் ஒருவருக்கு 3 ஆண் குறிகள் இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
78 வயது முதியவர்
பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பின் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.
அவரது உடலை ஆய்வு செய்த பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சி மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3 ஆண்குறிகள்
அந்த முதியவருக்கு 3 ஆண்குறிகள் இருந்துள்ளது. 'டிரிஃபாலியா'(Triphallia) என்று அழைக்கப்படும் மிக அரிய இந்த பிறவி குறைபாடு உலகில் 2 வது நிகழ்வாகும்.
2020 ஆம் ஆண்டில் ஈராக் நாட்டில் ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறந்தது. கூடுதல் ஆண்குறிகள் இரண்டிலும் சிறுநீர்க்குழாய் இல்லை, இதனால் அவை பொதுவாக செயல்பட இயலாது. அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக இருந்த 2 ஆண் குறிகளை மருத்துவர்கள் நீக்கி விட்டனர்.
ஆனால் இந்த மனிதர் இறக்கும் வரை தனக்கு அப்படி ஒரு குறைபாடு இருப்பது தெரியாமலே வாழ்ந்து முடித்துள்ளார். வெளிப்புற பார்வைக்கு தெரியாமல் மற்ற 2 சிறிய ஆண் குறிகளும் விதைப்பைக்குள் இருந்துள்ளது.