இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா - தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Milk Thiruvallur
By Karthikraja Aug 21, 2024 06:30 AM GMT
Report

ஆவின் பால் பண்ணையில் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பண்ணை

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

thiruvallur kakkalur aavin

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்20) வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது உற்பத்தியாகி வெளியே வரும் பாலை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி(30) என்பவர் ஈடுபட்டிருந்தார். 

ராக்கி கட்ட ஆசைப்பட்ட மனைவி - மூக்கை அறுத்த கணவர்

ராக்கி கட்ட ஆசைப்பட்ட மனைவி - மூக்கை அறுத்த கணவர்

பெண் உயிரிழப்பு

அப்போது எதிர்பாராதவிதமாக உமாராணியின் தலை முடி,மற்றும் துப்பட்டா இயந்திரத்தின் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. கணப்பொழுதில் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டது. இதனால் உமா ராணி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், ஆவின் பண்ணைக்கு சென்று உயிரிழந்த உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

thiruvallur aavin police enquiry

விசாரணையில், உயிரிழந்த உமா ராணி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், இவரின் கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆவின் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.