கோவிஷீல்ட் தடுப்பூசியால் இளம்பெண் உயிரிழப்பு; கதறும் பெற்றோர்கள் - பயந்த வழக்கு!
கோவிஷீல்ட் தடுப்பூசியால் இறந்ததாக இளம்பெண் பெற்றோர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவிஷீல்ட்
கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததது. மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸ் தாக்கியது.
இந்த பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த அரசு உடனே தடுப்பு மருந்தை உருவாக்க முயற்சித்தது.ஒட்டுமொத்த மருத்துவ துறையுமே இதற்காக போராடியது. இதனை அடுத்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின. அந்த வகையில், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட்,
இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டு நாட்டில் பரவலாக கொரோனா காலக்கட்டத்தில், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிலையில், ரத்த உறைவு மற்றும் பிளேட்லெட் ஐ குறைக்க கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்படுத்துவாய்ப்பு உண்டு என மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இளம்பெண்
இந்த நிலையில், கடந்த ஆண்டு ரித்தாயிகா ஸ்ரீ ஓம்ட்ரி(18) என்ற மாணவி தல் டோஸ் கோவிஷீல்டு செலுத்தியுள்ளார். பிறகு ஏழு நாட்களுக்குள் அவருக்கு தொடர் காய்ச்சல், வாந்தி, மயக்கம் வந்ததால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு சிகிச்சை பெறும்போது அவரது மூலையில் இரத்த உறைவு இருப்பதை கண்டறிதனர்.
அடுத்த இரண்டே வாரங்களில் சிகிச்சைப் பலனின்றி ரித்தாய்கா பலியானார். இறப்புக்கு காரணம் அப்போது தெரியவில்லை, பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு ஆர்டிஐ மூலம், தங்களது மகள் ரிதாய்கா (த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்) நோயால் பாதிக்கப்பட்டு,
தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான எதிர்வினை காரணமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.இதை தொடர்ந்து ரித்தாயிகாவின் பெற்றோர்கள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.