விமான கழிவறையில் பிறந்த குழந்தை - கர்ப்பமாக இருப்பதே தெரியாத பெண்!
கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண் விமானத்தில் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் பிரசவம்
ஈகுவாடார், குவாயாகில் இருந்து தர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற பெண் பயணம் செய்தார். இந்நிலையில், இவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
வலியில் துடித்துள்ளார். அதனையடுத்து அருகில் இருந்த பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். மேலும், மானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர்.
அதிர்ச்சி தகவல்
தொடர்ந்து அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் அந்த பெண் உறைந்து போனார்.
TW : Baby geboren tijdens KLM-vlucht vanuit Ecuador: “Zowel Tamara als Maximiliano waren gelukkig in goede gezondheid”, schrijft het Spaarne... https://t.co/Yp2ry2PX3a pic.twitter.com/jpwSvep56F
— Stigmabase | UNIONE (@StigmabaseD) December 12, 2022
உடனே, பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையில் பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.